Saturday, April 9, 2016

மதுரைக்காரர்கள் மிஸ் பண்ணக்கூடாத 4 ட்ரெக்கிங்குகள்



வெறுமனே ஜாலிக்காகவோ, வீக் என்ட் என்ஜாய்மென்டுக்காகவோ மட்டும் ட்ரெக்கிங் செல்லாமல், மறக்கடிக்கப்பட்டு வரும் தமிழ் பண்பாட்டு வரலாற்றை மீட்டெடுக்கவும், இயற்கையோடு இயந்து வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வியலை தெரிந்து கொள்ளவும், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்பணர்வை இளைய தலைமுறையினரிடம் உருவாக்கவும், சமணர்கள் வாழ்விடங்களை கண்டு வரவும், பாண்டிய ஆட்சி காலத்தின் எச்சங்களை தெரிந்து கொள்ளவும், மொகலாய, நாயக்க மன்னர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்துள்ள சிறப்பு வாய்ந்த வரலாற்று அடையாளங்களை காணச்செல்லும் வகையில் வித்தியாசமான நடை பயணங்களையும், டிரெக்கிங்கையும் சிலர் நடத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு பயணமும்புதிதாக ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளும் விதத்தில் பயனுள்ளதாக இருக்கும். பெருநகர வாசிகளுக்கு இது வித்தியாசமான பயணமாக இருக்கும். வெளியூரில் இருப்பவர்கள் இதில் கலந்துகொள்ள என்ன செய்யவேண்டும், யாரை தொடர்புகொள்ள வேண்டும்?



மலைகளை நோக்கி பசுமை நடை (green walk)

'பசுமை நடை'  அமைப்பு இதுவரை ஐம்பது பசுமை நடை பயணங்களை வெற்றிகரமாக நடத்திமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சுற்றியுள்ள நாகமலை, பசுமலை, யானைமலை, அழகர்மலை, திருப்பரங்குன்றம் சமணர் மலை, கொட்டாம்பட்டி மலை, கீழையூர் மலை, சிங்கம்புனரி திருமலை போன்ற இடங்களுக்கு அழைத்து செல்கிறார்கள். தொல்பொருள் துறை ஆய்வாளர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்கள்.
தொடர்புகொள்ள வேண்டிய எண்: பசுமை நடை - 9789730105

மலைகளை நோக்கி பாரம்பர்ய நடை பயணம் (heridage walk)

தானம் அறக்கட்டளை இந்த ஏற்பாட்டை செய்து வருகிறது. கல்லூரி மாணவர்களையும், பொது மக்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மலைகளுக்கு அழைத்து செல்கிறார்கள். இயற்கை உணவின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்கள். பாரம்பர்ய நடைபயணத்தை தற்போது மதுரையின் வரலாற்று தொடர்புடைய இடங்களுக்கும் அழைத்து செல்லும் வகையில் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.
தொடர்புக்கு 0452 269 2721

காடுகளை காக்க ஒரு நடைபயணம்
மதுரை வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் மலைக்காடுகளை சுற்றிக்காண்பிக்க பொதுமக்களை அழைத்துச்செல்லுகிறார்கள். மதுரை மாவட்டத்தில் 3 மலைகளில் உள்ள வழித்தடங்களில் பொதுமக்களை அழைத்துச்செல்லும், சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மலைவாழ் இளைஞர்கள் 16 பேர் உள்ளனர்.



மாவட்ட வன அலுவலர் நிகர் ரஞ்சன் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். சிறுமலையில் துவங்கி குட்லாடம்பட்டி வரையிலும், உசிலம்பட்டியில் தொட்டப்பநாயக்கனூர் மலை, நத்தத்தில் கழுவமலைகளை காண பொதுமக்கள் அழைத்துச்செல்லப்படுகிறார்கள். தங்கள் பெயர்களை, மதுரை வனத்துறை அலுவலகத்தில் பதிவு செய்தவர்களை, வார விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார்கள். சூழல் கெடாதவாறு பொருட்களை எடுத்து வரவேண்டும். சாப்பாடு, குடிநீருக்கு சிறு தொகையை மட்டும் வனத்துறை பெற்றுக்கொள்கிறது.
தொடர்பு கொள்ள 0452 2535043, 2536279 



தண்ணீர் தடம் தேடி ஒரு பயணம்

'நாணல் நண்பர்கள்' என்ற அமைப்புதேடல் மிகுந்த இப்பயணத்தை பாண்டிய நாட்டு தலைநகரான மதுரையின் நதி வரும் வழிகள் வழியே  நடத்துகிறார்கள். இந்த பயணம் முழுக்க மதுரை மாவட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நம் தாகம் தீர்த்த நதிகளின் முந்தைய வளம், இன்றைய நிலை, பிறப்பிடம், மலைக்காடுகள், பாசனம், நீர்நிலை கட்டுமானம், நதிக்கரை மக்களின் வாழ்வியல் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் வகையிலும், அதை இந்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நடத்துகிறார்கள்.  தொடர்புக்கு : நாணல் 9543663443











1 comment: