Wednesday, April 27, 2016

இந்த இந்திய கிராமம் ஏன் ஆசியாவின் சுத்தமான கிராமம்

ந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ள மாவுலி நாங் கிராமத்தில் இயற்கை சூழலுடன் வசிக்கின்றனர் காஷி இன மக்கள்.
கல்வியறிவு உள்ள கிராமமாக இருந்தாலும், இம்மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான்.  வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளின் ஓரம் காணப்படும் மூங்கில் வீடுகள், பார்ப்பவர்களின் கண்களையும், நெஞ்சத்தையும் கொள்ளை கொள்கின்றன.

சாலையின் எந்த ஒரு பகுதியிலும் குப்பைகளை காண முடியாது. காரணம், சாலைகளின் இரு மருங்கிலும் கனிம மற்றும் கரிமக் கழிவுகளை தனித்தனியாக தரம் பிரித்து கொட்டுவதற்காகமூங்கிலால் ஆன குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளில் சேகரிக்கப்படும் குப்பை உரமாக பயன்படுத்தப்படுகிறது.



கல்வியையும், விவசாயத்தையும் இரு கண்களாய் எண்ணும் இவர்கள், காடுகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாடு வளம் பெற காடுகள் தேவைஎன்பதை உணர்ந்துள்ள இவர்கள், அதை போற்றி பாதுகாக்கவும் செய்கின்றனர். சிறு வயது முதல் சுத்தம், சுகாதாரம் குறித்து பெற்றோரால் கற்பிக்கப்படுகிறது. அங்குள்ள பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்ய யாரும் தயங்குவதில்லை.

தோட்டங்கள், சாலைகள் மற்றும் பொது இடங்களை பொதுமக்களே சுத்தம் செய்து பராமரிக்கின்றனர். இந்தப் பணி தினமும் மாலையில் நடக்கிறது. சீரான, சுத்தமான சாலைகள், திட்டமிட்ட கட்டமைப்பு, தடையில்லாமல் கிடைக்கும் சுத்தமான குடிநீர் வசதி போன்றவை, மக்களின் நிம்மதியான சுகாதாரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.பெரியவர்களும், சிறியவர்களும், பொறுப்போடு செயல்படுவதால் மாவுலிநாங் கிராமம் சுத்தமாக காட்சியளிக்கிறது.
மாவுலிநாங் மலைகள், நீர்வீழ்ச்சிகள், காடுகள், அரிய வகை மரங்கள் என இயற்கையோடு, சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இக்கிராமம் வளர்ச்சி அடைந்துள்ளது. சுற்றுலா பத்திரிகையான, ‘டிஸ்கவர் இந்தியாமாவுலி நாங் கிராமத்திற்கு, ‘ஆசியாவிலேயே சுத்தமான கிராமம்என்ற விருது வழங்கி கௌவுரவித்தது.
பாரம்பர்யமாக இங்குள்ள மக்கள், சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணி பாதுகாத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பற்ற வகையில் சுத்தம், சுகாதாரத்தை பேணுவதை இவர்களின் தலையாய கடமையாகக் கொண்டுள்ளனர்.


மன் கி பாத்என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் பிரதமர் மோடி, மாவுலிநாங் கிராமத்தை வெகுவாக பாராட்டினார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், மாவுலிநாங் கிராம மக்களைப் போல் செயல்பட்டால், இந்தியா விரைவில் சுத்தமான நாடாக மாறும்எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பாலான நகரங்கள், குப்பையாலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டாலும் சீர்கெட்டுள்ள நிலையில், மாவுலிநாங் கிராம மக்களை பின்பற்றினால் இன்னும் சிலவருடங்களில் குப்பைகளற்ற சுகாதாரமான மற்றும் சுத்தமான இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும். 


- த.ராம்






No comments:

Post a Comment